களைகட்டிய இறுதிக்கட்ட பிரச்சாரம்.. “புதினின் வளர்ப்பு நாய்க்குட்டி டிரம்ப்” – ஜோ பைடன்!

ரஷ்ய அதிபர் புதினின் வளர்ப்பு நாய்க்குட்டி போல அமெரிக்க அதிபர் டிரம்ப் செயல்படுவதாக அதிபர் டிரம்பை ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிவரும் நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியிலும், நாளை மறுநாள் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும், அமெரிக்காவில் தேர்தல் நடைபெறும் தேதிக்கு முன்பாகவே வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான வசதிகள் உள்ளது. அதன்படி பொதுமக்கள் ஆர்வமாக வந்து தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் பதவிக்கு மைக் பென்ஸ் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் போட்டியிடுகின்றனர். இருவரும் கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த நிலையில், தற்பொழுது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை எட்டியுள்ளது.

தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை ஜோ பைடன், மிச்சிகன் மாகாணத்தில் நடத்தினார். அந்த பிரச்சாரத்தில் ரஷ்ய அதிபர் புதினின் வளர்ப்பு நாய்க்குட்டி போல அமெரிக்க அதிபர் டிரம்ப் செயல்படுவதாகவும், அமெரிக்காவில் இருந்து டிரம்பை ஒழிந்தால்தான் கொரோனா ஒளியும் எனவும் கூறியுள்ளார்.