FIH மகளிர் ஹாக்கி உலக கோப்பை போட்டியில் கால் இறுதிக்கு செல்லுமா இந்திய அணி!

நேற்று(ஜூலை 7) நடந்த FIH மகளிர் ஹாக்கி உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதிக்கொண்டன. இதில் நியூசிலாந்துக்கு எதிராக 3-4 என்ற கோல் கணக்கில் இந்திய அணி  தோல்வியடைந்தது.

இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அதிக மதிப்பெண்களை பெற்று முதலிடத்தில் FIH மகளிர் ஹாக்கி உலக கோப்பை போட்டியின் கால் இறுதிக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டது.

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான பகுதி-பி ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும் கிராஸ்-ஓவர் சுற்றுக்கு முன்னேறியது. இந்த கிராஸ்-ஓவர் சுற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

இதில் இந்திய அணி ஸ்பெயின் அல்லது தென் கொரியாவை எதிர்க்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Varathalakshmi

Leave a Comment