அரைசதம் விளாசிய படிக்கல், ஏபி டிவில்லியர்ஸ்.. 163 ரன்கள் குவித்த பெங்களூர் .!

ஐபிஎல் டி20 தொடரின் 3-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.

பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக படிக்கல் மற்றும் ஃபின்ச் இருவரும் களமிறங்கினர். இவர்கள் ஆட்டம் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடி வந்தனர். சிறப்பாக விளையாடி வந்த படிக்கல் அரைசதம் அடித்து 56 ரன்கள் குவித்து தனது விக்கெட்டை இழந்தார். அடுத்த சில நிமிடங்களில் ஃபின்ச் 29 ரன்னுடன் வெளியேறினார்.

இதைதொடர்ந்து, இறங்கிய விராட் கோலி சொற்ப ரன்களில் வெளியேறினர். பின்னர், களமிறங்கிய ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து 51 ரன்கள் குவித்தார். இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் குவித்தனர்.

164 ரன்கள் இலக்குடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்க உள்ளது.

 

author avatar
murugan