FIFA WorldCup2022: மெஸ்ஸியின் அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி! வரலாறு படைத்த சவுதி அரேபியா.!

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022, அர்ஜென்டினா-சவுதி அரேபியா  போட்டியில் சவுதி அரேபியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 இல் இன்றைய போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியும் சவுதி அரேபியா அணியும் விளையாடின. இந்த போட்டியில் முதல் பாதியில் அர்ஜென்டினா அணி முதல் கோலை அடித்து முன்னிலை வகித்தது.

அதன் பின் இரண்டாவது பாதியில் அர்ஜென்டினா அணியால் கோல் அடிக்க முடியவில்லை, ஆனால் சவுதி அரேபியா அணி 2 கோல்களை அடித்து 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை தோற்கடித்து வரலாறு படைத்தது.

author avatar
Muthu Kumar

Leave a Comment