மீனவர் தின ஸ்பெஷல்… கொடியசைத்த எம்பி கனிமொழி.! சீறிப்பாய்ந்த தூத்துக்குடி படகுகள்.!

மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகரில் படகு போட்டி நடைபெற்றது. இந்த படகு போட்டியை எம்பி கனிமொழி கொடியசைத்து தோடங்கி வைத்தார்.  

நேற்று உலகம் முழுக்க மீனவர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் கோலாகலமாக கொண்டாடினர். இந்த மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் சிறிய ரக மோட்டார் படகு போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியை தூத்துக்குடி எம்பியும், திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 15க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர்.

இதில், வெற்றிபெற்றவர்களை மாலை அணிவித்து தூத்துக்குடி எம்.எல்.ஏ கீதா ஜீவன் பாராட்டினார். இன்று நடைபெறும் விழாவில், தூத்துக்குடி எம்பி கனிமொழி வெற்றி பெற்றவர்களுக்கும், பங்குபெற்றவர்களுக்கும் நினைவு பரிசுகளை வழங்க உள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment