ஒரு காரின்விலை ரூ.537 கோடியா ..?

சொகுசு கார் தயாரிப்பில் முன்னணியில் இருக்கு ஃபெராரி நிறுவனத்தில் கார் ஒன்று ரூ.537 கோடிக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகின் அதிக விலை மதிப்புள்ள கார் என்ற பெருமையை ஃபெராரி 250 ஜிடிஓ மாடல் கார் ஒன்று பெற்றுள்ளது.

Image result for ஃபெராரி 250 ஜிடிஓ1962-ம் ஆண்டிலிருந்து 1964-ம் ஆண்டு வரை ஃபெராரி 250 ஜிடிஓ மாடல் கார்களில் வெறும் 36 மட்டுமே தயாரிக்கப்பட்டன. இதில் 1963-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஃபெராரி ஜிடிஓ மாடல் கார் பிரான்சில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஏலத்துக்கு விடப்பட்டது. Image result for ஃபெராரி 250 ஜிடிஓஇந்தக் கார் 8 கோடி டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.537 கோடி) ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஏலத்தில் அதிக தொகைக்கு விற்கப்பட்ட கார் என்ற பெருமையை ’ஃபெராரி 250 ஜிடிஓ’ மாடல் கார் பெற்றுள்ளது.

Image result for Ferrari 250 GTO1963-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஃபெராரி 250 ஜிடிஓ மாடல் கார் ஜெர்மனியில்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டது. 1990-ம் ஆண்டுக்குப் பிறகு டிகே இன்ஜினீயரிங் என்ற வாகன கையகப்படுத்துதல் நிறுவனத்தில் பராமரிக்கப்பட்டது.

Related imageகடந்த 2014-ம் ஆண்டு இதே ஃபெராரி 250 ஜிடிஓ மாடல் கார் 3.8 கோடிக்கு ஏலத்தில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரான்ஸ் ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஃபெராரி நிறுவனத்தின் 4153 ஜிடி மாடல் கார் உலகின் அதிக புகழ்பெற்ற கார் என்ற விருதை பெற்றுள்ளது. ஃபெராரி 4153 ஜிடி மாடல் கார் 1964-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment