“பெண் கல்வி” குறித்த விழிப்புணர்வுக்காக பல சவால்களை சமாளித்த தந்தை..!

 

ஓடிசா மாநிலத்தை சேர்ந்த ஷாஜல் ஷீத் ,பெண் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஓடிசாவில் இருந்து ராஜஸ்தானில் படிக்கும் தன் மகளை பார்க்க சுமார் 3630 கி.மீ. பைக்கிலேயே பயணம் செய்துள்ளார் .

ஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஷாஜல் ஷீத் இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவரது இரண்டாவது மகள் நேகா ஷீத் ராஜஸ்தானில் உள்ள ஒரு மணிப்பால் பல்கலைகழகத்தில் பி.டெக் படித்து வருகிறார். இந்நிலையில் அவரது மகளை காண ஷாஜல் ஷீத் தனது பஜாஜ் பல்சர் 200 என்எஸ் பைக்கில் சுமார் 3630 கி.மீ., பயணம் செய்துள்ளார்.

இவர் பயணத்தின் போது இவர் 6 நாட்களில் 5 மாநிலங்களை கடந்துள்ளார் அவர் கூறுகையில் : “என மகள் நேஹா ஷீத்தை காண 6 நாட்களாக ஓடிசா, ஜார்க்கண்ட், பீகார், உ.பி., ராஜஸ்தான் என 5 மாநிலங்களை கடந்து சுமார் 3630 கி.மீ. பயணம் செய்து பார்க்க வந்துள்ளேன்.

இந்த பயணம் என்பது வெறும் எனது மகளுக்காக மட்டும் அல்லது பெண் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தான். பெண்களுக்கு கல்வி தான் உயர்வை தரும். வெறும் பட்டபடிப்பு மட்டும் பெண்களுக்க போதாது நாம் அவர்களுக்கு உயர் கல்வியை வழங்க வேண்டும். நான் இந்த பயணத்திற்கு நேகாஸ்தான் என பெயரிட்டுள்ளேன். ஓடிசா மாநிலம் ராஜஸ்தானில் துவங்கிய என் பயணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் முடிந்துள்ளது. ” என கூறினார்.

இவர் பயணத்தின் போது பெண் கல்விகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் வழியில் பள்ளிக்கு சென்ற பெண் குழந்தைகளுடன் பெண்களுக்கு கல்வி அளிப்போம் என்ற வாசகத்துடன் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த பயணம் இவருக்கு முதன்முறை அல்ல அதற்கு முன் இவரது மூத்த மகளின் வெளியூரில் படிக்கும்போதும் இது போன்ற ஒரு பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். சுமார் 3600 கி.மீ. என்பது நெடுதூர பயணம் இந்த பயணத்தின் போது பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியது இருக்கும். அவை அனைத்தையும் மீறி இவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளா்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment