அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட தந்தை, மகன்…! நடந்தது என்ன…?

செல்போன் விளையாடுவதை தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மகனின் இழப்பாய் தாங்க இயலாமல் தந்தையும் தற்கொலை. 

இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை செல்போனுக்கு அடிமையாகி உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் குன்றத்தூர் அருகே இந்த செல்போன் பிரச்சனையால் மகனும், தந்தையும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவனான மகன் நவீன் குமார் செல்போனில் விளையாடுவதை தந்தை கண்டித்துள்ளார். இதனை அடுத்து நவீன் குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகனின் தற்கொலை செய்த அதே இடத்தில் துக்கம் தாங்காமல் கார்பெண்டரான தந்தை சுந்தரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அடுத்தடுத்து தந்தை மகன் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment