பிரபல தயாரிப்பாளரும், எழுத்தாளருமாகிய ஜான் பால் மரணம் …!

John Paul

மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளருமாகிய ஜான் பால் அவர்களுக்கு 72 வயதாகிறது. இவர் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.

இவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜான் பாலின் நண்பர் இவரது சிகிச்சைக்காக உதவி கேட்டு சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு இருந்துள்ளார்.

மேலும், இவரது சிகிச்சைக்காக கேரளா அரசு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ஒதுக்கியுள்ளது. இருந்தாலும், சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளார். இவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் என கூறப்படுகிறது.