கோடை வெப்பம் அனைவரையும் வாட்டி வருகிறது. இந்த வெப்பத்தால், பல உயிரிழப்புகளும் தொடர்கிறது. இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிப்பில், ‘சைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ரஷ்ய நடிகரான அலெக்ஸ்சாண்டர் என்பவர், படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் தங்கி இருந்துள்ளார். இதனையடுத்து, இவர் கடுமையான வெப்பத்தின் காரணமாக உயிரிழந்துள்ளார். இது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.