நீட் தேர்வில் தோல்வி – தற்கொலை செய்துகொண்ட மாணவி…!

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி. 

கடந்த ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை 17,78,025 மாணவர்கள் எழுதி இருந்தனர். இந்த நிலையில், நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதியிருந்த நிலையில், நீட் தேர்வு எழுதிய நிலையில், 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை அம்பத்தூரை அடுத்துள்ள, திருமுல்லை வாயலை சேர்ந்த அமுதா என்பவர் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து  வந்துள்ளார்.

இந்த நிலையில், இவரது மகள் சுவேதா பிலிப்பைன்ஸ் கல்வி நிறுவனத்தில் 2-ஆம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்துள்ளார். இருப்பினும் இவர் அதிக மதிப்பெண்களை பெற்று, இந்தியாவிலேயே மருத்துவம் பயில வேண்டும் என விருப்பப்பட்டதால், அவர் நீட் தேர்வை எழுதியுள்ளார்.

நீட் தேர்வு முடிவு வெளியான நிலையில், அந்த தேர்வில் தோல்வி அடைந்ததால், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment