ஆகஸ்ட் 12 ம் தேதி கொரோனா வைரஸ் தடுப்பூசி நிர்வாகம் குறித்த நிபுணர் குழு கூட்டம்!

ஆகஸ்ட் 12 ம் தேதி கொரோனா வைரஸ் தடுப்பூசி நிர்வாகம் குறித்த நிபுணர் குழு கூட்டம்.

உலகமே முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரசை அழிக்கும் பணியில் உலக நாடுகள் மிக தீவிரமாக களமிறங்கியுள்ளது.

இந்நிலையில், டாக்டர் வி.கே. பால் தலைமையில் தடுப்பூசி நிர்வாகத்திற்கான நிபுணர் குழு, என்.ஐ.டி.ஐ. ஆயோக் ஆகஸ்ட் 12 ம் தேதி கூடி, கொரோனா வைரஸ் தடுப்பூசி கொள்முதல் மற்றும் நிர்வாகத்தின் தளவாடங்கள் மற்றும் நெறிமுறை அம்சங்களை பரிசீலிக்கும் என்று சுகாதார மற்றும் குடும்ப வெல்ஃபேர்ஸ் அமைச்சகம் செவ்வாயன்று தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சீரம் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 225 ரூபாய்க்கு கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டவுடன், அதை 10 கோடி எண்ணிக்கையில் தயாரித்து இந்தியாவுக்கும் மற்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கும் வழங்குவதற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் சீரம் மையம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட 92 நாடுகளுக்கும் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் நோக்கில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதனையடுத்து, ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ சமீபத்தில் மாஸ்கோவில் உள்ள மாநில ஆராய்ச்சி நிலையமான கமலேயா நிறுவனம் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை முடித்துவிட்டதாக கூறியுள்ளது. இதனால், கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டியில் ரஷ்யா முன்னிலை வகிக்கிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.