ரஜினிகாந்துடன் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் சந்திப்பு

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் ரஜினிகாந்தை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ரஜினி தெரிவித்த கருத்து அதிருப்தியளிப்பதாக இஸ்லாமிய மதகுருமார்கள் கூறிய நிலையில், அவரை சந்தித்து குடியுரிமை சட்டத்தின் பாதிப்புகள் குறித்து விளக்கம் தரவுள்ளனர்.