#BREAKING: தேர்வு வினாத்தாள் லீக்- புதிய வினாத்தாளில் தேர்வு..!

நாளை நடைபெறவுள்ள 12-ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வின் கணித வினாத்தாள்  புதிய வினாத்தாள்கள் மூலம் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான கணித வினாத்தாள் லீக்கானது. இந்நிலையில், புதிய வினாத்தாள் மூலம் 12-ஆம் வகுப்பு கணிதத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இரண்டாவது திருப்புதல் தேர்வுகளில் கணித வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

author avatar
murugan