மகனால் நடந்த விபரீதம்., ரூ.36 லட்சத்தை இழந்த முன்னாள் ராணுவ வீரர்!

ஓய்வுபெற்ற இந்திய ராணுவ வீரர் ஒருவரின் மகன், சிங்கப்பூரில் உள்ள கேமிங் போர்ட்டலில் இருந்து கேமை பதிவிறக்கம் செய்து, கூடுதல் அம்சங்களைப் பெற ரூ.36 லட்சம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் விளையாட்டுக்கு அடிமையான மகன், இணையதளத்தில் கேமை பதிவிறக்கம் செய்ததால், அவரது தந்தையான ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவரின் கணக்கில் இருந்து ரூ.36 லட்சம் பிடித்தம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஆக்ராவில் உள்ள சைபர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த கேம் சிங்கப்பூரில் உள்ள கேமிங் போர்ட்டலில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது தெரிவந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ஆக்ரா போலீஸ் விசாரித்து வருவதாகவும், பணம் குறித்து எதுவும் கூற முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்ராவில் உள்ள ஹரிபர்வத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுவன் தனது தந்தையின் செல்போனில் இருந்து ‘Battle Ground Game’ பதிவிறக்கம் செய்ததைத் தொடர்ந்து,  ரூ.36 லட்சம் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தனது கணக்கில் இருந்து பணம் பிடிக்கப்பட்டதை அறிந்த சிறுவனின் தந்தையான ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சைபர் போலீசில் புகார் அளித்துள்ளார். சிறுவன் விளையாட்டிற்கு அடிமையாகிவிட்டதால், விளையாட்டின் கடைசி கட்டத்தை எட்டுவதற்காக ‘அதிநவீன ஆயுதங்களை’ வாங்குவதற்காக ரூ.36 லட்சத்தை ஆன்லைனில் செலுத்தியதாக கூறப்படுகிறது. UPI முறையில் பணம் செலுத்தப்பட்டதாகவும், தொடர்ந்து விளையாடி வந்த சிறுவன் கூடுதல் அம்சங்களுக்கு பெறுவதற்காக பணம் செலுத்தியதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கிடையில், பணத்தை திரும்ப பெற சைபர் செல் அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். இருப்பினும், அத்தகைய நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுகள் தொலைவில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. பணம் வரவு வைக்கப்பட்ட கணக்கை கண்டுபிடிக்க சைபர் போலீசார் முயற்சித்து வருகின்றனர். ஓய்வுபெற்ற ஜவான் தனது UPI கட்டண விருப்பத்தை முடக்கியிருந்தால், அந்தத் தொகை பிடிக்கப்படாமல் இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

author avatar
Castro Murugan