தளபதி விஜய் கூட இப்படி மட்டும் நடிக்க மாட்டேன் – ஆத்மிகா.!

தளபதி விஜய்க்கு தங்கையாக நடிக்கமாட்டேன் என நடிகை ஆத்மிகா தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் மீசையை முறுக்கு என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. அதனை தொடர்ந்து நரகாசுரன், காட்டேரி, கண்ணே நம்பாதே ஆகிய திரைப்படங்கள் ரிலீசாக தயாராகவுள்ளது.

aathmika 3

எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆத்மிகா தற்போது கோடியில் ஒருவன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தை மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையும் நல்ல விமர்சனத்தையும் பெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஆத்மிகாவிடம் உங்களுக்கு எந்த நடிகருடன் நடிக்க ஆசை என்று கேட்டதற்கு விஜய் என பதிலளித்துள்ளார்.

vijay 4

தங்கை அல்லது முக்கிய கதாபாத்திரம் ஆகியவற்றில் நடிப்பீர்களா என கேட்டதற்கு.. இல்லை இல்லை.. ஹீரோயினாக தான் நடிப்பேன்.. விஜய் சார் மட்டுமில்லை சிவகார்த்திகேயன் சார்.. தனுஷ் சார் ஆகியோருடன் நடிக்க ஆசை உள்ளது” என தெரிவித்துள்ளார்.