ஈரோடு – வேட்பாளர்களுக்கான ஆய்வு கூட்டம்!

ஈரோடு மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் வேட்பாளர்களுக்கான ஆய்வு கூட்டம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் வேட்பாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலரும், ஈரோடு மாநகர்ச்சி ஆணையருமான சிவகுமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்தில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி, தேர்தல் மேலிட பார்வையாளர் பங்கேற்று தேர்தல் விதிகள் குறித்து வேட்பாளர்களுக்கு எடுத்துரைத்தனர்.

erode11meeting

இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கியது. ஈரோடு ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தலைமையில், பெல் நிறுவன அதிகாரிகள் வாக்கு இயந்திரங்களை சரிப்பாகின்றனர். இதுபோன்று, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் வாக்கு இயந்திரங்கள் சரிபார்ப்பில் பங்கேற்றனர். தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியான நிலையில், கூடுதல் வாக்கு இயந்திரங்கள் தேவைப்படுமா ஆய்வு செய்யப்பட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment