,

3-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை..! NHRC நடவடிக்கை எடுக்க உத்தரவு..!

By

டெல்லி எம்சிடி பள்ளியில் மூன்றாம் வகுப்பு சிறுமி சிறுமியை விளையாட்டு ஆசிரியர் பாலியல் கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் உள்ள எம்சிடி பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக பணிபுரியும் உமாகாந்த் என்பவர் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சிறுமியை பள்ளிக்குள் ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

sexually assaults minor
[Representative Image]

வன்கொடுமைக்கு ஆளாகிய சிறுமி ஐந்து நாட்களாக சரியாக சாப்பிடாமல் அவளது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதால் சிறுமியின் தாய் என்ன நடந்தது என்று கேட்டுள்ளார். அதற்கு விளையாட்டு ஆசிரியர் தன்னை பள்ளியில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி தாயிடம் கூறினார். இந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியதாகவும் கூறினார்.

இதனை அடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் எம்.சி.டி பள்ளியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தொடர்பாக டெல்லி அரசு மற்றும் காவல் துறையிடம் நான்கு வாரங்களுக்குள் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கை அனுப்பியது.

NHRC
[Representative Image]

NHRC அறிக்கையில் எழுதியது : 

ஆசிரியர்கள் ஒவ்வொருவரம் மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளனர். ஏனெனில் அவர்கள் தங்கள் மாணவர்களின் உண்மையான பாதுகாவலர்களாகவும் வழிகாட்டிகளாகவும் இளம் தலைமுறையினருக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க உண்மையான கைவினைஞர்களாகவும் உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன், சமூகத்தில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குகிறது என்று கூறியது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரிய ஆணையம், “எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்” என்று கூறியது.

Dinasuvadu Media @2023