ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..! அதிமுக வேட்பாளர் இன்று அறிவிப்பு?

இன்று ஈபிஎஸ் தரப்பில் இன்று வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BY ELECTION

இந்த நிலையில், பிரதான அரசியல் கட்சியினர் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஒவ்வொரு பிரதான கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ், தேமுதிக, அமமுக மற்றும் நாம் தமிழர் போன்ற கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அதிமுகவை பொறுத்தவரையில், ஈபிஎஸ் – ஓபிஎஸ் என இருதரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், இதுவரை இருதரப்பிலும் வேட்பாளர் குறித்த எந்த அறிவிப்பும்வெளியாகவில்லை.

sengottaiyanerode

இதற்கிடையில், நேற்று ஈரோட்டில் அதிமுக பணிக்குழுவுடன் ஆலோசனை நடத்திய பின்  செய்தியாளர் சந்திப்பில் பேசிய செங்கோட்டையன், இன்று காலை தேர்தல் பணிமனை திறக்கப்படும் என்று அதன்பின் மகிழ்ச்சியான செய்தி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். செங்கோட்டையனின் இந்த அறிவிப்பால் இன்று ஈபிஎஸ் தரப்பில் இன்று வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment