டி20 வரலாற்றில் இங்கிலாந்து, விண்டீஸ் அணிகள் புதிய சாதனை.. ..!

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடியது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் தொடரையும், டி20 தொடரையும் கைப்பற்றியது.  ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் இரு அணிகளும் இணைந்து புதிய சாதனையை படைத்தனர்.

இங்கிலாந்தும், மேற்கிந்திய தீவுகளும் விளையாடிய T20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த T20 தொடரில்  இரு அணிகளும் மொத்தம் 120 சிக்ஸர்கள் அடித்தனர். இதன் மூலம் இதுவரை நடந்த சர்வதேச T20 தொடரில் இரு அணிகள் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும்.

2023-ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் சேர்ந்து மொத்தம் 120 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளது. கடந்த 2022 ஆண்டு பல்கேரியா vs செர்பியா அணிகள் சேர்ந்து 97 சிக்ஸர்களுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் கடந்த 2022 ஆண்டு 96 சிக்ஸர்களுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

2019 இல் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் சேர்ந்து 94 சிக்ஸர்களுடன் 4-வது இடத்தில் உள்ளது. இறுதியாக 5-வது இடத்தில் 2022 இல் பஹ்ரைன் vs குவைத் அணிகள் 91 சிக்சர்களை அடித்துள்ளது.

author avatar
murugan