பாகிஸ்தானை பார்சல் செய்த இங்கிலாந்து தொடரை கைபற்றி அசத்தல் வெற்றி

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே ஐந்து ஒருநாள் தொடர் போட்டியானது நடைபெற்று வருகிறது.இதில் தொடாரை இங்கிலாந்து கைபற்றி உள்ளது.

இந்த இரு அணிகளும் மோதும் போட்டியானது நடைபெற்று வந்தது இதில் முதல்  போட்டியானது மழையால் கைவிடப்பட்டது.இரண்டாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து    12 ரன்கள் முன்னிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னாள் போட்டியில் பந்து  வீச கூடுதல் நேரம் எடுத்து கொண்டதால் இங்கிலாந்து அணியிண் கேப்டன் இயான் மோர்கன்க்கு தடைவித்திக்கபட்டது.காலியாக இருந்த  கேப்டன் பொறுப்பை ஜோஸ் பட்லர் கவனித்தார்.மேலும் 4வது  ஒருநாள் தொடர் போட்டியானது நாட்டிங்காமில்  நடந்தது.

Related image

இதில் முதலில் பேட்டிங் செய்த பாக்., நிர்ணயிக்கப்பட்ட 50  ஓவரில்  7 விக்கெட் இழப்புக்கு 340  ரன்களை குவித்தது .அந்த அணியில் அதிகபட்சமாக பாபர் அஜாம் 115 ரன்கள் மற்றும் பஹர் ஜமான் 57,முகமது ஹபீஸ் 59 ரன்னும் எடுத்து அணியிக்கு வழு சேர்த்தனர்.

இங்கிலாந்து அணியின் பவுலர்கள் ஆன டாம் குர்ரன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். மார்க்வுட் 2 விக்கெட்டுகளையும் , ஜோப்ரா ஆர்ச்சர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

Related image

341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இங்கிலாந்து அணி  49.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி அபார வெற்றி பெற்றது.

Related image

இந்த போட்டியில் தனது 8வது சதத்தை பூர்த்தி செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் 114 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தார்.சீரான ரன் குவிப்பின் போது  மிடில் ஆடர் பேட்ஸ்மேன்கள் அவுட்டகவே பென் ஸ்டோக்ஸ் மட்டும் கடைசி வரை நின்று (71 ரன்கள் ) அந்த அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

இதனால் தொடரை  3-0 என்று இங்கிலாந்து வெற்றி பெற்றது.இதில் தொடரை இழந்தது பற்றி பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறுகையில் நாங்கள் பேட்டிங்கில் நன்றாக   செயல்பட்டோம் ஆனால் எங்களுடைய பில்டிங் இன்று சற்று கை கொடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

author avatar
kavitha

Leave a Comment