#INDvENG: சூரியகுமார் அதிரடி அரைசதம்.. இங்கிலாந்து அணிக்கு 186 ரன்கள் இலக்கு!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காம் டி-20 போட்டி நடைபெற்று வரும் நிலையில், 20 ஓவர் முடிவில் இந்திய அணி 185 ரன்கள் எடுத்தது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடரில் விளையாண்டு வருகிறது. இதில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ள நிலையில் 4 ஆம் போட்டி, அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா – கே.எல்.ராகுல் களமிறங்கினார்கள்.இதில் 12 ரன்கள் மட்டும் அடித்து ரோஹித் சர்மா வெளியேற, பின்னர் 14 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் வெளியேறினார். அவரையடுத்து களமிறங்கிய சூரியகுமார் யாதவ் அதிரடி சிக்ஸர் அடித்து அதிரடியாக ஆடத் தொடங்கினார்.

1 ரன் மட்டுமே எடுத்து கோலி வெளியேற, அரைசதம் அடித்து வெளியேற, ரிஷப் பந்த் களமிறங்கி சிறப்பாக ஆடினார். 30 ரன்கள் அடித்து அவரும் வெளியேற, பின்னர் களமிறங்கிய பாண்டியா, 11 ரன்கள் மட்டுமே அடித்தார். இறுதியாக இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது.