இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமா! தேர்தல் நெருங்கும் நேரத்தில் முடிவு

Election Commissioner: நாடாளுமன்ற தேர்தல் தேதி வெகுவிரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேர்தல் ஆணையர்களுள் ஒருவராக இருந்த அருண் கோயல் தனது ராஜினாமா முடிவை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Read More – ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு..! குற்றவாளி புனே நகரில் பதுங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்

தேர்தல் ஆணையராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அருண் கோயல் நியமிக்கப்பட்ட நிலையில் அவரின் பதவிக்காலம் 2027 வரை உள்ளது. இருந்த போதும் அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அருண் கோயல் ராஜினாமாவை தொடர்ந்து தேர்தல் ஆணைய அமர்வில் 2 பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன.

Read More – நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி கொலை! பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ. 7 லட்சம் வழங்கும் ஆதி திராவிடர் நலத்துறை

அதன்படி, 3 ஆணையர்களைக் கொண்ட அமைப்பான இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒரு பதவி காலியாக உள்ள நிலையில், அருன் கோயல் திடீரென ராஜினாமா செய்துள்ளார், இதனால் தற்போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டும் பதவியில் உள்ளார்.

Read More – ஒடிசாவில் ஒத்துவராத தொகுதி பங்கீடு.? தனித்து போட்டியிடும் பாஜக.!

அருண் கோயல் ராஜினாமாவை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டுள்ளார், இந்த தகவலானது மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment