சனாதனத்திற்கு எதிரான போரில் கல்வியே நமது ஆயுதம் – கனிமொழி

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ மூலமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

இந்த நிலையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து தனியார் செய்தித்தாள் ஒன்று விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நம் வீட்டுப்பிள்ளைகள் பெறும் கல்வியின் வலிமை என்னவென்று அவர்களுக்குத் தெரியும். சனாதனத்திற்கு எதிரான போரில் கல்வியே நமது ஆயுதம். அதை உணர்ந்திருக்கும் அற்பர் கூட்டம், பதட்டத்தில் தன் கீழ்த்தரத்தை வெளிக்காட்டுகிறது. நமக்கும் சனாதன ஒட்டுண்ணிகளுக்கும் இடையில் தொடரும் வரலாற்றுப்போருக்கு நம் ஆயுதத்தைக் கூர்தீட்டுவோம்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.