தமிழகத்தில் மன்னராட்சி முறையை கொண்டு வர திமுக முயற்சி: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் மன்னராட்சி முறையை கொண்டு வர திமுக முயன்று வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார். சேலம் மாவட்டத்தின் மல்லமூப்பம்பட்டியில் திமுக, பாமக, கொ.ம.தே.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

அவர்களை வரவேற்று எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், “திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் அனைத்துப் பொருட்களின் விலையும் 40% வரை உயர்ந்துள்ளன. கொரோனா காலக்கட்டத்தில் கூட விலைவாசியை அதிமுக அரசு கட்டுக்குள் வைத்திருந்தது.
கருணாநிதி அவருக்கு பின்பு மு.க.ஸ்டாலின், தற்போது உதயநிதி, நடந்து முடிந்த திமுக இளைஞரணி மாநாட்டில் இன்பநிதியும் கலந்து கொண்டார்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களே இருக்காது..! விசிக மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் உரை

மன்னராட்சி முறையை கொண்டு வர திமுக முயற்சி செய்கிறது. மக்களை பற்றி கவலைப்படாத இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. கொலை, கொள்ளை, திருட்டு நடக்காத நாளே இல்லை என்றாகிவிட்டதோடு கஞ்சா தாராளமாக கிடைக்கிறது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழிகின்றனர்” என்றார்.

Leave a Comment