ED சம்மனை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.! அரவிந்த் கெஜ்ரிவால்!

அமலாக்கத்துறை சம்மன் சட்டவிரோதமானது, உடனடியாக அதனை வாபஸ் பெற வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராவதற்கு முன்பு இவ்வாறு தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தது.

அந்தவகையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கில், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் ஆகியோரை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அமலாக்கத்துறை கடந்த திங்கள் கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியது.

சட்டவிரோத பணவரிவர்த்தனை.! அமலாக்கத்துறை முன் ஆஜராகும் அரவிந்த் கெஜ்ரிவால்.!

அந்த சம்மன் அடிப்படையில் இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அரவிந்த் கெஜிரிவால் நேரில் ஆஜராக உள்ளார் என கூறப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக உள்ளதால், ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்குமுன்பு கெஜ்ரிவால் கூறுகையில், அமலாத்துறையின் சம்மன் சட்டவிரோதமானது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது.

பாஜகவின் வேண்டுகோளின் பேரில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 5 மாநிலங்களில் தேர்தல் பிரசாரத்துக்கு செல்லக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எனவே, அமலாக்கத்துறை உடனடியாக சம்மனை திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனால் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராவாரா அல்லது தவிர்ப்பாரா என்பது தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல், அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என்று தெரிய வந்ததாக ஆம் ஆத்மி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்