மீண்டும் டெல்லியில் நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்..!

டெல்லி என்சிஆர் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று மாலை 4:08 மணியளவில் காசியாபாத், நொய்டா உள்ளிட்ட தேசிய தலைநகர் பகுதி முழுவதும் உணரப்பட்டது. அதன் நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக இருந்ததாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. அதன் மையம் ஃபரிதாபாத்திலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் கிழக்கே ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதிக்கு வந்தனர். இதற்கு முன்பும் தலைநகர் டெல்லியில் அக்டோபர் 3-ஆம் தேதி நிலநடுக்கம் உணரப்பட்டது. அப்போது நேபாளத்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லி என்சிஆர் உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் வழங்கிய தகவலின்படி, அக்டோபர் 3 ஆம் தேதி மதியம் 2:20 மணிக்கு 4.2 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து 6.2 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட நேரம் நில அதிர்வு ஏற்பட்டது.

 

author avatar
murugan