இனி முக்கிய சான்றிதழ்களை எம்எல்ஏ அலுவலகத்தில் பெறலாம்.! புதியவசதியை தொடங்கினார் தமிழக முதல்வர்.!

அனைத்து தொகுதி எம்எல்ஏ அலுவலகங்களிலும் இசேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக அனைத்து எம்எல்ஏ அலுவலகங்களிலும் கணினி இன்று வழங்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவை பெறுவதற்கு அரசு அலுவலகங்களில் அமைந்திருக்கும் இசேவை மையங்களை நாட வேண்டி இருக்கும்.

தற்போது அதனை இன்னும் எளிமையாக மாற்ற தமிழகக்கத்தில் உள்ள அனைத்து தொகுதி எம்எல்ஏ அலுவலகங்களிலும் இசேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக அனைத்து எம்எல்ஏ அலுவலகங்களிலும் கணினி இன்று வழங்கப்பட்டுள்ளது.

இதற்கென 10 வெவ்வேறு கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் தலைமை செயலகத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கணினிகளை வழங்கினார்.

மேலும், கால்நடை பராமரிப்பு கட்டடம், மீன்வளத்துறை கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். அடுத்ததாக, 32 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள குற்ற வழக்கு தொடர்வு துறையின் அலுவலக கட்டடத்திற்கு அடிக்கல் நட்டினார் முதல்வர் ஸ்டாலின்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment