தீவிரமடையும் மிக்ஜாம் புயல்…  தமிழகத்திற்கு விரைந்த 250 தேசிய மீட்புப்படை வீரர்கள்.! 

சென்னை மற்றும் அதனை சுற்றுவட்டார மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களையும் மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) கடுமையாக தாக்கி வருகிறது.  சென்னையில் இருந்து 90கிமீ தொலைவில் வங்கக்கடலில் மிக்ஜாம் புயலானது நிலைகொண்டுள்ளது. மணிக்கு 10கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இதன் காரணமாக அதி கனமழை அளவு கொட்டி தீர்த்து வருகிறது. இன்று இரவு வரை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்,  காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பிவிட்டன.

Michuang Cylone Live : வெளுக்கும் கனமழை..! முக்கிய ஏரிகளின் நீர்வரத்து அதிகரிப்பு.!

இதனால் மீட்புப்பணிகளில் ஈடுபட தேசிய மீட்பு படையினர் தமிழகத்திற்கு விரைந்துள்ளனர். 250 வீரர்கள் கொண்ட 10 தேசிய மீட்புப்படை குழுக்களாக பிரிந்து சென்னை, செங்கல்ப்ட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் . பெங்களூருவில் இருந்தும் 3 மீட்பு குழுக்கள் சென்னை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.