“நண்பா நீ ஒரு மந்திரவாதி ” தனுஷை பாராட்டிய ஆனந்த் எல் ராய்..!!

கர்ணன் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ஆனந்த் எல் ராய் தனுஷை பாராட்டி ட்வீட் செய்துள்ளார். 

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, பிரியங்கா, சந்திரமௌலி, கௌரி கிஷன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் நேற்று முன்தினம் அமேசான் பிரேமில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தை பார்த்து சில பிரபலங்கள் பாராட்டி வருகின்றார்கள். அந்த வகையில், இயக்குனர் ஆனந்த் எல் ராய் கர்ணன் படத்தை பார்த்து விட்டு ” கர்ணன் திரைப்படம், அற்புதம், புத்திசாலித்தனம்  படத்தின் அனுபவத்தை இப்படித்தான் கூறமுடியும். மாரி செல்வராஜ என்ன ஒரு அற்புதமாக கதை சொல்லியிருக்கிறார். உங்கள் எண்ணங்களை செல்லுலாய்டில் அழகாக வரைந்திருக்கிறீர்கள் தனுஷ் நீ ஒரு நடிகர் என நான் நினைத்தேன் எனது நண்பா நீ ஒரு மந்திரவாதி என என்னிடம் சொல்லியிருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.