#BREAKING: முதல்வர் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி அறிவிப்பு..!

முதல்வர் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடியும், கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு, இந்த பேரிடரை எதிர்கொள்ளவும் தங்களால் இமுயன்ற உதவியை வழங்க வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.இதைத்தொடர்ந்து, பலர் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்றினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரவும் ,உரிய நிவாரணங்களை வழங்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும்.

மேலும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் கொரோனா நிவாரண பணிகளுக்கென முதலமைச்சர் பொது நிவாரண நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan