நன்னாரி சர்பத் தினமும் குடிச்சா இந்த நோய்கள் வராது .!! என்னென்ன தெரியுமா ?

Nannari Sarbath : கோடை காலத்தில் நாம் எல்லாரும் விரும்பி குடிக்கும் ஒரு பானம் தான் நன்னாரி சர்பத், அந்த  நன்னாரி சர்பத்தை தினம் குடிப்பதால் உடலில் ஏற்பட கூடிய சில நோய்கள் வாராது. அதை பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம்.

கோடை காலத்தில் பருகுவதற்கு சில நேரங்களில் நமது வீட்டில் உள்ள பிரிட்ஜ்ஜில் ஐஸ்தண்ணீர் வைத்து அதை நாம் குடித்து வருவோம். இன்னும் சில நேரங்களில் வெளியில் சென்றால் நாம் ஏதாவது ஜுஸ் கடையில் இருந்து எதாவது ஜுஸ் வாங்கியும் குடிப்போம். அதிலும் நன்னாரி சர்பத் நமக்கு எல்லாருக்கு பிடித்த ஒரு பானம் என்றே கூறலாம்.

சிலர் வீட்டிலேயே நன்னாரியை வாங்கி வைத்து தினமும் குடித்து வருவார்கள், அப்படி நாம் குடிக்கும் நன்னாரி சர்பத் நமது உடலில் உண்டாக கூடிய நோய்களை சரி செய்யும் என்று உங்களுக்கு தெரியுமா ? இந்த பதிப்பில் நாம் அதை பற்றி தான் பார்க்க போகிறோம்.  நன்னாரியுடன், எலுமிச்சை பழச்சாறு சிறிதளவு சேர்த்து அதனுடன் ஐஸ் தண்ணீர் சேர்த்து தினமும் ஒரு கிளாஸ் குடித்து வந்தால் அது நமக்கு தினமும், உடலுக்கு தேவையான குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் கொடுக்கும்.

மேலும், குழ்நதைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும்  நீரிழப்பை சரி செய்யும் தன்மை கொண்டது தான் இந்த நன்னாரி சர்பத். இது மட்டுமின்றி நம் உடலில் உண்டாகக்கூடிய இந்த நோய்களை எல்லாம் இந்த நன்னாரி சர்பத் வரவிடாமல் தடுத்துவிடும்.

சிறுநீரக கல் 

கோடை காலத்தில் தினமும் ஒரு கிளாஸ் நாம் இந்த நன்னாரி சர்பத்தை குடிப்பதனால் நம் சிறுநீரகத்தில் உருவாக கூடிய கற்களை இது வரவிடாமல் தடுக்கிறது. மேலும், சிறுநீர் கழிக்கும் பொழுது உண்டாக கூடிய எரிச்சலையும் இது சரி செய்து விடுகிறது. சிறுநீர் செல்லும் பாதையில் எந்த ஒரு தொற்று ஏற்படாமல் தவிர்க்கவும் இந்த நன்னாரி சர்பத் நமக்கு உதவுகிறது.

அசிடிட்டி 

நம் எதாவது உணவை சாப்பிடும் போது அது நம் வயிற்றில் அல்லது நெஞ்சில் எரிச்சலை உண்டாக்குகிறது என்றால் அதற்கு அசிடிட்டி அதாவது அமிலத்தன்மை அதிகம் ஆகி இருக்கிறது என்று அர்த்தம். அத்தகைய அமிலத்தன்மை பிரச்சனையும் இந்த நன்னாரி சர்பத் குணப்படுத்திகிறது. தினமும் ஒரு க்ளாஸ் இதை குடித்து வரும் போது வயிறு மற்றும் நெஞ்சு பகுதியில் உள்ள எரிச்சல் சரியாவதுடன் அஜீரண கோளாறையும் சரி செய்து நமக்கு மேலும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

மலசிக்கல் 

கோடை காலத்தில் ஏற்பட கூடிய பெரும் அவதி என்றால் பலருக்கும் சரியாக செரிமானம் ஆகாமல் இருக்கும் கழுவிகளை வெளியேற்றுவதற்கு நாம் சிரம படுவதுண்டு. அப்படி பட்ட மலச்சிக்கல் கோலாரையும் இந்த நன்னாரி சர்பத் சரி செய்த்து விடுகிறது. இதனால் கழிவுகள் வெளியேறுவதால் ரத்த ஓட்டமும் சிறப்பாக இருக்கும்.

இரத்த சுத்திகரிப்பு 

நமது ஆரோக்கியத்திற்கு முக்கியமான காரணம் நமது உடலில் அமைந்துள்ள ரத்த ஓட்டம் தான் அப்படி பட்ட நம் உடலுக்கு தேவையான ரத்தத்தை மேலும் அதிகரிப்பதுடன், ரத்தத்தில் உண்டாக கூடிய கழிவுகளையும் சிறுநீர் மூலம் வெளியேற்றும் வேலைகளையும் இந்த நன்னாரி சர்பத் செய்கிறது. மேலும், ரத்தத்தில் இது போல பிரச்சனைகள் இருப்பவர்களும் இந்த நன்னாரி சர்பத்தை குடித்து வந்தால் ரத்தத்தில் உண்டாகும் இது போன்ற பிரச்சனை சரி ஆகும்.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.