'வாட்ஸ் அப் பயன்பாட்டை குறைத்து கொள்ள வேண்டும்' ராணுவ வீரர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

சமீப காலமாக இந்திய ராணுவ வீரர்களின் வாட்ஸ் அப்பை சில சமூக விரோதிகள் வேவு பார்ப்பதாக, உளவுத்துறை எச்சரித்து வந்தது. இந்நிலையில் ராணுவ வீரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ராணுவ வீரர்கள் தங்களது வாட்ஸ்அப் பயன்பாட்டை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், மேலும், சில உயர் அதிகாரிகளின் பேஸ்புக் கணக்கை முற்றிலுமாக நீக்கிவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் இந்திய ராணுவ வீரர் ஒருவரது வாட்ஸ்அப் நம்பர் ஆனது பாகிஸ்தானில் உள்ள ஒரு குரூப்பில் இவரது அனுமதி இல்லாமலே இணைக்கப்பட்டு இருந்தது. இதனை அறிந்த அந்த ராணுவ வீரர் அந்த குரூப்பை பற்றிய தகவலை மட்டும் எடுத்துக்கொண்டு அந்த குரூப்பில் இருந்து தன் நம்பரை வெளியேற்றினார். இதுகுறித்து மேலதிகாரியிடம் புகார் கூறியிருந்தார். இதேபோல் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரர்களின் வாட்ஸ் அப்பை உளவு பார்க்கின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாகத்தான் உயர் ராணுவ அதிகாரிகள் சமூக வலைதள பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும் என ராணுவம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளதாம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.