டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது – உயர்நீதிமன்றம்

திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மீதி ஜூன் 10 ஆம் தேதி வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம். ஏற்கனவே மே 29 ஆம் தேதி வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

திமுக எம்.பி.க்கள்  டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் தங்களுக்கு எதிரான வன்கொடுமை தடைச்சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மேலும் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறநின் மனுக்களை அவசர வழக்காக பிற்பகலில் நீதிபதி நிர்மல்குமார் விசாரணை மேற்கொள்கிறார் என்று கூறப்பட்டது. திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகிய இருவர் மீது மே 29 வரை எந்தவித கடுமையான நடவடிக்கைளும் எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று கோவை வெரைட்டி ஹால் காவல் நிலையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை மே 29 ஆம் தேதி ஒத்திவைத்து. இதையடுத்து, இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மீதி ஜூன் 10 ஆம் தேதி வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று வழக்கை அதுவரை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்