ஊரடங்கு காலங்களில் இவர்களை மட்டும் வேலைக்கு கூப்பிடாதீர்கள்!

ஊரடங்கு காலங்களில் இவர்களை மட்டும் வேலைக்கு கூப்பிட கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மே-31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தற்போது 4-வது கட்டமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு 50% பணியாளர்களை வேலைக்கு வருமாறு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, கர்ப்பிணிகள், மாற்று திறனாளிகள், அதிக ஆபத்துடைய உடல் நிலையை கொண்டவர்கள் ஆகியோருக்கு இதில் விலக்கு அளிக்குமாறு அனைத்து துறை அதிகாரிகளையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.