இதையெல்லாம் சாப்பிடாதீங்க! மலச்சிக்கல் உருவாக காரணமான உணவுகள்!

மலச்சிக்கல் என்பது தற்பொழுதைய காலகட்டத்தில் பலருக்கும் இருக்க கூடிய ஒரு பிரச்சனையாக இருக்கிறது, இது உருவாவதற்கு கரணம் நாமும் நமது உணவு பழக்கமும் தான், அது என்ன உணவுகள் என அறிந்து கொள்ளலாம் வாருங்கள். 

மலச்சிக்கல் உருவாக காரணமான உணவுகள்

மலச்சிக்கல் உருவாக நமது உணவு பழக்கமும், சோம்பேறி தனமும் தான் காரணமாக இருக்கிறது. குறிப்பாக நாம் தினமும் சத்து என நினைத்து உட்கொள்ளும் பால் முக்கிய கரணம் என்றால் நம்ப முடிகிறதா, ஆனால் இந்த பாலை அதிகம் உட்கொள்வதாலும் மலச்சிக்கல் உருவாகுமாம். மேலும், இறைச்சி மலச்சிக்கலுக்கு காரணமாகிறது. இதில் அதிகப்படியான கொழுப்பு மற்றும் புரத சத்துக்கள் இருந்தாலும், நீர்சத்து கிடையாது. இதன் காரணமாக மலச்சிக்கலை உண்டு பண்ணுகிறது. கேக் மற்றும் குக்கீஸ் போன்ற இனிப்புகள் மூலமாகவும் மலச்சிக்கல் உண்டாகுமாம், அதிகப்படியான இனிப்புகளை அடிக்கடி உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

முக்கியமாக துரித உணவுகள் உட்கொள்வது மலச்சிக்கலை உருவாக்கும், அதிலுள்ள இரசாயனம் காரணமாக அது குடலின் செயல்பாடுகளை தடுத்து மலச்சிக்கல் உருவாக்க காரணமாகிறது. மேலும், உணவுக்கு பின்பதாகவும் முன்பதாகவும் போதிய அளவு தண்ணீர் பருக்க வேண்டும், தண்ணீர் பருகுவது குறைவாக இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும் அபாயம் இருக்கும்.

ஃ பைபர் வெள்ளை  ரொட்டிகள், அதாவது மைதா உணவுகள் மூலமாக மலச்சிக்கல்  அதிகம்  இருக்கிறது,இளைஞர்களை விட முதியவர்களுக்கு இதன் பாதிப்பு உட்க்கொன்ற முதல் முறையே தெரியுமாம், குறைந்த வயதினர் அடிக்கடி உட்கொள்வதால் மலச்சிக்கல் உருவாகுமாம். ஏனென்றால் மைதா உணவுகள் செரிமானம் அடைவதற்கு நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளும் என்பதால் தான். அதற்காக இந்த உணவுகளை எல்லாம் உன்ன கூடாத என வருத்தப்பட வேண்டாம், இது போன்ற உணவுகளை உட்கொண்டாலும், அதன் பின்பதாக சிறு தானியங்கள் அல்லது பழ வகைகளை சேர்த்து கொள்ளுங்கள். அது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.

author avatar
Rebekal