டொனால்ட் டிரம்ப் ரூ. 680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு..!

பெண் பத்திரிகையாளர் தொடர்ந்து அவதூறு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ரூ. 680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுவெளியில் தன்னை அவமானப்படுத்தியதாக பெண் பத்திரிக்கையாளர் ஜீன் கரோல் என்பவர் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 10 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கோரி ட்ரம்ப் மீது எழுத்தாளர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம் 83 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.680 கோடி நஷ்ட ஈடு வழங்க ட்ரம்புக்கு உத்தரவிட்டுள்ளது. ஜீன் கரோல் கேட்டதை விட 8 மடங்கு அதிகமாக நீதிமன்றம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.  நீதிமன்ற தீர்ப்பு ஆபத்தானது என்றும் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என டொனால்ட் டிரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிடம் அரசியல் விளையாட்டு எடுபடாது – ரஷ்ய அதிபர்

30 ஆண்டுகளுக்கு முன்பு டிரம்ப் தன்னை ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் பாலியல் துன்புறுத்தியதாக கரேல் எழுதிய புத்தகத்தில் தெரிவித்தார். 1995-96 களின் நடுப்பகுதியில் மன்ஹாட்டனில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ஷாப்பிங் செய்யும்போது டிரம்ப் டிரஸ்ஸிங் அறையின் கதவை மூடிவிட்டு பலாத்காரம் செய்ய முயன்றார், அப்போது பயத்தில் தான் போலீசில் புகார் செய்யவில்லை என்று கரோல் அந்த புத்தகத்தில் தெரிவித்து இருந்தார்.

கரோலின் இந்த குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்தார். இதைத்தொடர்ந்து, கடந்த 2019-ம் ஆண்டு நியூயார்க் நீதிமன்றத்தில் ஜீன் கரோல் வழக்கு தொடர்ந்தார். கரோலின் புகார் பொய்யானது என்றும் அவரை நான் சந்திக்கவில்லை என்றும் அவர் தனது புத்தகங்களை விற்க ஜீன் கரோலின் தந்திரம் என்றும் டிரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan

Leave a Comment