இவ்வாறு செய்தது தமிழ் சமூகத்துக்கே தலை குனிவு – நடிகர் கார்த்தி டுவிட்!

கொரோனா வைரஸால் பல லட்சக்கணக்கோனோர் மடித்து வரும் சம்பவம் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவதால், மக்கள் அச்சத்தில் வீட்டுக்குள்ளேயே இருக்கின்றனர். ஆனால், மருத்துவர்கள் தான் சமூகத்துக்கு எதிரான உயிர்கொல்லி வைரஸை போக்கி மக்களை பாதுகாக்கின்றனர்.

இவ்வாறு சமூக அக்கறையை மனதில் கொண்டு தன்னலம் பாராமல் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து கொரோனாவால் இறந்தவர் தான் சென்னையை சேர்த்த டாக்டர் சைமன். இவரது உடலை தங்களது சுடுகாட்டில் அடக்கம் செய்வதால் கொரோனா பரவும் என்ற அச்சத்தில் சென்னை வேலங்காடு பகுதி மக்கள் தடுத்தனர். இது சமூகத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் கார்த்திக், டாக்டர் சைமன் அவர்களின் இறுதிச் சடங்கை இடையூறு செய்தது தமிழ்ச் சமூகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இனியும் இதுபோன்ற தவறு நிகழாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். திரு. சைமன் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் அனைவரின் சார்பாக என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,

author avatar
Rebekal