நாகப்பாவை கடத்தினவருக்கு நயன்தாராவை கடத்த தெரியாதா..? – சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருப்பத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சந்தனமரங்கள் தான் இந்த மாவட்டத்தில் பெரிய வருவாயை ஈட்டி கொடுத்தது. வீரப்பன் மீது அநியாயமாக பலி போட்டார்கள். அவர் அந்த காட்டில் இருந்தவரை ஒருவனும் காட்டிற்குள் செல்லவில்லை.

அவர் இருந்திருந்தால், இன்றைய காவேரி நிலை வந்திருக்காது. அவர் எந்த குற்றமும் செய்யவில்லை. அவர் மீது வீணாக பழி சுமத்தினர். நாகப்பாவை கடத்தினவருக்கு நயன்தாராவை கடத்த தெரியாதா? என கலகலப்பாக பேசியுள்ளார். அவரையே திருடன் என்று சொன்னால் இங்குள்ளவர்களை என்ன சொல்ல போகிறீர்கள்.

நமக்கு காட்டுவள பாதுகாப்பு குழு ஒன்று உள்ளது. அது என்ன செய்கிறது என்று தெரியவில்லை. சந்தனமரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம். வேட்பாளர் குறித்த அறிவிப்பை உரிய நேரத்தில் வெளியிடுவோம். இந்த மண்ணுக்கும், மக்களுக்குமான பிரச்சனைக்கு யார் முன்னுக்கு நிற்கிறார்களோ அவர்கள் தான் உண்மையான தலைவன் என தெரிவித்து உள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.