அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உடல்நிலை…??? மருத்துவர்கள் அடுத்தடுத்து அறிக்கை

உலகயத்தையே ஒரு வித பீதியிலேயே வைத்திருக்கும் கொரோனா வைரஸ் வல்லரசு நாடு என்று வாய்மொழியப்படும்  அமெரிக்காவில் தனது கோரத்தாண்டவ நடனத்தை அரங்கேற்றி வருகிறது. அந்நாட்டில் சுமார் 75 லட்சம் பாதிப்புகள், 2 லட்சத்தை கடந்த மரணங்கள் என்று  கொரோனா பாதிப்பிலேயே முதலிடத்தில் முன்னதாக நீடிக்கிறது. இந்நிலையில் இந்தப் பாதிப்புக்கு மத்தியில் அடுத்த மாதத்தில் நவ.,3ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது.பெருகி வரும் தொற்றை கட்டுப்படுத்தி, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியையும் தக்க வைக்க வேண்டிய இக்கட்டான கட்டாயத்தில் ட்ரம்ப் இருந்து வரும் சூழ்நிலையில்  தீவிர பிரசாரத்தில் டிரம்ப் ஈடுபட்டு வந்த நிலையில் தனது ஆலோசகர்  ஹோம் ஹிக்சுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது இதனால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட டிரம்ப்,  கொரோனா பரிசோதனை செய்து கொண்ட போது டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா  இருவருக்கும்  தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அமெரிக்க ராணுவ மருத்துவமனையில் டிரம்ப் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் டிரம்பின் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாவது: டிரம்ப் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறார். என்றபோதிலும் அடுத்த 48 மணி நேரம் மிகவும் முக்கியமானது  என்று தெரிவித்துள்ள மருத்துவர்கள் டிரம்ப் இயல்பாக நடமாடி வருகிறார். கடந்த 24 மணி நேரமாக அவருக்கு காய்ச்சல் இல்லை.  இருமலும் குறைந்து விட்டது. டிரம்பின் இருதயம், சிறுநீரகம், கல்லீரல் ஆகிய முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு இருக்க ட்ரம்ப் தான் நலமாக இருப்பதை வீடியோ வெளியீட்டு அதனை உறுதி செய்துள்ளார்.
author avatar
Kaliraj