சசிகலாவை சாதராண வார்டுக்கு மாற்ற மருத்துவர்கள் முடிவு!

சசிகலா உடல்நிலை சீராக உள்ளதால் ஐசியூ வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்ற பெங்களூரு மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பெங்களூர் மருத்துவமனையில் ஐசியூ வார்டில் சிகிச்சை பெற்று சசிகலாவின் உடல்நிலை குறித்து விக்டோரியா மருத்துவ கல்லூரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் சசிகலாவிற்கு கொடுக்கப்படும் ஆக்சிஜன் அளவு 3 லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், சசிகலாவுக்கு கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்துள்ளது. சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதால் சசிகலாவுக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் சசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற மருத்துவமனையை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மருத்துவமனை அறிக்கையிலும் ஐசியூவில் கண்காணிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை.

கொரோனா காரணமாக சசிகலாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு 6வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சசிகலாவின் நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் சுவாசிக்கும் திறன் சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்