இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி பையன் யார் தெரியுமா? அச்சச்சோ இவரு பயங்கரமான ஆள் ஆச்சே!

Throwback சினிமாவில் இருக்கும் பல நடிகர்களின் சிறிய வயது புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாவது உண்டு. அந்த புகைப்படங்களை பார்த்து பலரும் அடடே இவுங்களா இது? என ஆச்சரியப்படுவது உண்டு. அப்படி தான் தற்போது சிறிய வயதில் நடிகர் சத்யராஜுடன் ஒரு நடிகர் ஒருவர் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் வைரலாகி வருகிறது.

read more- உருவாகிறது பயோபிக்! இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்..இயக்குனர் இவர் தான்!!

அந்த புகைப்படத்தில் சத்யராஜுடன் இருக்கும் அந்த குட்டி பையன் யார் என்று பலரும் சீக்கிரமாகவே கண்டுபிடித்து இருப்பீர்கள். அந்த பையன் வேறு யாரும் இல்லை தமிழ் சினிமா மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருக்கும் பஹத் பாசில் தான். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் எம்மாடியோ பஹத் பாசிலா இது? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

read more- மிரட்டும் சூர்யா…அதிர வைக்கும் பிரமாண்ட காட்சிகள்.. ‘கங்குவா’ படத்தின் டீசர் வெளியீடு!

தன்னுடைய கண்களிலே மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவர்  எந்த கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் சரி தனது அசுரத்தனமான நடிப்பை வெளிக்காட்டி வருகிறார் என்றே சொல்லவேண்டும். அந்த அளவிற்கு வில்லனாகவும் சரி, ஹீரோவாகவும் சரி மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு என சமீபகாலமாக கலக்கி கொண்டு இருக்கிறார்.

read more- கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் கொடுத்த சரத்குமார்!

தமிழில் கடைசியாக மாமன்னன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்று கூட சொல்லலாம். அந்த படத்தை தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜூன்க்கு வில்லனாக புஷ்பா 2 படத்திலும் நடித்து வருகிறார். அதனைப்போலவே, தமிழில் மீண்டும் வடிவேலுவுடன் மாரீசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.