“அருவா” படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..?

இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள அருவா படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்.

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது திரையரங்குகளில் ரீ ரிலீசாகி உள்ளது. இந்த படத்தி வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 40 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் , இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்திலும், இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நவராசா என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யா அருவா படத்தில் எப்போது நடிக்கப்போகிறார் என்பதை குறித்த தகவல் கிடைத்துள்ளது.

ஆம், நடிகர் சூர்யா தனது 40 வது திரைப்படத்தில் வருகின்ற ஜூன் மாதத்திற்குள் முடித்துவிடுவார் அதற்கு பிறகு இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடி வாசல் படத்தில் நவம்பர் அல்லது, டிசம்பர் மாதம் படத்திற்கான படப்பிடிப்பில் கலந்துகொள்வார். வாடிவாசல் படத்தை முடித்து விட்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் அடுத்த வருடம் மே மாதம் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இயக்குனர் ஹரி தற்போது நடிகர் அருண்விஜயின் 33 வது படத்தை இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.