அசத்தலான மீன் 65 செய்வது எப்படி தெரியுமா?

  • சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருவருமே விரும்பி சாப்பிடக் கூடிய உணவு வகைகளில் ஒன்று.
  • அசத்தலான மீன் 65 செய்வது எப்படி தெரியுமா?

நாம் நமது இல்லங்களில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருவருமே விரும்பி சாப்பிடக் கூடிய உணவு வகைகளில் ஒன்று, மீன். இதனை நாம் விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில், அசத்தலான மீன் 65 செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • மீன் – 1 கிலோ
  • மிளகாய்த்தூள் – 2 டேபிள்
  • ஸ்பூன் மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • கார்ன் மாவு – 1/2 கப்
  • மைதா மாவு – 1/2 கப்
  • இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
  • முட்டை – 2
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு பவுலில் மீனை கழுவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கார்ன்மாவு மற்றும் மைதா மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு, அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, முட்டை உடைத்து அதில்சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு படுத்த வேண்டும்.

எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் நாம் ஊறவைத்த மீனை சிறிது சிறிதாக போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மீன் 65 தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.