தங்கத்துக்கு 6 கோடி, வெள்ளிக்கு 4 கோடி, வெண்கலத்துக்கு 2 கோடி.! பரித்தொகையை அறிவித்த உத்தரபிரதேச அரசு.!

  • 2020-ம் ஆண்டுக்கான ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
  • அந்த வகையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த வீரர்-வீராங்கனையருக்கு தலா ரூ.6 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

2020-ம் ஆண்டுக்கான ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இது மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் தனித்துவம் கொண்டதாக உள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில், இந்தியா சார்பில் பங்குபெறுவர்களை ஊக்குவிக்கும் விதமாக, தங்கம் வெல்லும் உத்திரபிரதேச மாநில வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.6 கோடியும், வெள்ளி பதக்கம் வெல்வோருக்கு தலா ரூ.4 கோடியும், வெண்கலம் வெல்வோருக்கு தலா ரூ.2 கோடியும், பரிசாக வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

மேலும், இந்த அறிவிப்பானது உத்திரபிரதேச ஒலிம்பிக் வீரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி அளிக்கப்படும் எனவும் உத்திரபிரதேச அரசு அறிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்