கேரளா ஸ்பெஷல் குளு குளு இளநீர் பாயசம் எப்படி செய்வது தெரியுமா…?

பாயாசம் என்றாலே பெரும்பாலும் பலருக்கும் பிடிக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை பாயசம் பிடிக்கும். இந்த பாயசத்தில் ரவை பாயாசம், சேமியா பாயாசம், பால் பாயாசம், பருப்புபாயாசம் என பல வகையுண்டு. அதிலும், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய கேரளா ஸ்பெஷல் இளநீர் பாயசம் மிகவும் அட்டகாசமாக இருக்கும். உஷ்ணம் அதிகமுள்ள இந்த நேரத்தில் நாம் எப்படி இந்த பாயசத்தை வீட்டில் தயாரிப்பது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • பசும்பால்
  • இளநீர் வழுக்கை
  • சர்க்கரை
  • தேங்காய்ப் பால்
  • நெய்
  • ஏலக்காய்த்தூள்
  • முந்திரி

செய்முறை

முதலில் ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்னதாக நாம் எடுத்து வைத்துள்ள இளநீர் வழுக்கையை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி அவற்றை ஒரு கைப்பிடி அளவு தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, மற்றதை சர்க்கரையுடன் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக விழுது போல் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அதன் பின் ஒரு தனி பாத்திரத்தில் பசும் பாலை ஊற்றி, பாதியாக குறையும் வரை காய்ச்சி எடுத்துக் கொள்ளவும். அதன் பின் அரைத்து வைத்துள்ள இளநீர் விழுதை பாலுடன் சேர்த்து ஏலக்காய்த்தூள் ஒரு சிட்டிகை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். அதன் பின்பு தேங்காய் பாலை இதனுடன் கலந்து விட்டு, உடனடியாக இறக்கி விடவும். பின் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பை இதனுடன் கலந்து எடுத்து வைத்துள்ள ஒரு கைப்பிடி இளநீர் வழுக்கை துண்டுகளையும் இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்பொழுது அட்டகாசமான இளநீர் பாயசம் வீட்டிலேயே தயார்.

author avatar
Rebekal