தளபதி 66 படத்திற்கு விஜய் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் விஜயின் 66 வது திரைப்படம் மற்றும் அதற்காக அவர் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அடுத்ததாக நடிகர் விஜயின் 66 வது திரைப்படம் மற்றும் அதற்காக அவர் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதாவது, விஜயின் 66 வது படத்தை தெலுங்கில் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் வம்ஷி இயங்குவதாகவும், படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதைபோல் இந்த படத்துக்கு விஜய்யின் சம்பளம் ரூ.120 கோடி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தென்னிந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் தளபதி விஜய் என கூறி வருகிறார்கள். தளபதி 66 படம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.