அன்னையர் தினம் உருவானது எப்படி தெரியுமா ?

இன்று நாம் அனைவரும் அன்னையர் தினத்தை மிக மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறோம். நாம் கொண்டாடுகிற அனைத்து பண்டிகைகளும் எதோ ஒரு காரணத்தினால் தான் உருவாகி இருக்கும்.

அந்த வகையில், நாம் இந்த பதிவில் அன்னையர் தினம் எவ்வாறு உருவானது என்பது பற்றி பார்ப்போம்.

அன்னா ஜார்விஸ் என்பவர் துவக்கி வைத்தது தான் இந்த அன்னையர் தினம். அன்னா ஜார்விஸ் திருமணமாகாதவர். ஆனால், இவர் அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர் என்பதால், இவரை மையப்படுத்தி அன்னையர் தினம் உருவாக்கப்பட்டது.

சமூக நலனில் அக்கறை கொண்ட ஜார்விஸ், ஏதாவது ஒரு நாளையாவது எல்லாரும் இணைந்து, தங்களை பெற்ற தாய்மாரை எண்ணி, அவர்கள் உயிரோடு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் அவர்களை கெளரவிக்க வேண்டும் என விரும்பினார். அந்த வகையில், அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண்மணி என்ற பெருமை ஜார்விஸை தான் சேரும்.

இதனையடுத்து, இந்த நாளை உருவாக்குவதற்காக பெரும் பாடுபட்டு, அனைத்து மக்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மக்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், 1911-ம் ஆண்டு அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.

அதனை தொடர்ந்து, அதிபர் உட்ரோ வில்சன் 1914-ம் ஆண்டு மே 8-ம் தேதி, அறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டார். அந்த அறிக்கையில் மே மாதம் இரண்டாம்  ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படும் என்று எழுதப்பட்டிருந்தது. இப்படி தான் இந்த அன்னையர் தினம் உருவானது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment