மாஸ்க் போடாவிட்டால் இதை பண்ணுங்க! மதுரை மாநகர காவல் ஆணையர் அதிரடி

மாஸ்க் போடாதவர்கள் குறித்து முகநூல் பக்கத்தில் பதிவிடலாம்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை  கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மதுரையில், இந்த வைரஸ் பாதிப்பால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பின் படி, மதுரையில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, பொது இடங்களில் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தால் உடனடியாக, அவர்கள் இருப்பிடத்துடன் கூடிய புகைப்படம், வீடியோவை பதிவு செய்து (83000-21100) மதுரை மாநகர பேஸ்புக் பக்கத்தில் பதிவிடலாம் என அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.