உடன்பிறந்தவர்களுக்கு இதை செய்து வாருங்கள்..!உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக மாறும்..!

உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக மாற உங்கள் உடன்பிறப்புகளுக்கு இதை செய்து வாருங்கள். 

“தனக்கு போகத் தான் தானமும் தர்மமும்” என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இதில் தனக்கு என்பது உங்களின் தேவைகள் மட்டுமல்ல உங்களது குடும்பத்தின் தேவைகளும் தான். தான தர்மம் செய்வதென்பது சிறந்த ஒன்று. ஆனால், தனது குடும்பத்தில் இருப்பவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்ற பார்க்காமல் ஊரில் உள்ளவர்களுக்கு செய்வதால் எந்த பலனும் கிட்டாது. அதனால் முதலில் உங்களது குடும்பத்தில் இருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு உங்களால் முடிந்த அளவு அன்பு காட்டுங்கள். அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பதும் விஷேச நாட்களில் உங்களிடம் இருந்து வரும் அழைப்பு, நீங்கள் பேச வேண்டும் என்ற ஒரு ஆசை இது போன்று தான் இருக்கும்.

அதனால் முடிந்த வரை உடன்பிறந்த சகோதரிகளை நன்றாக கவனித்து கொள்ளுங்கள். உங்கள் குடும்ப பெண்களை திருமணத்திற்கு பின்பு கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டு விடாதீர்கள். அவர்களது கண்ணீரும், ஏக்கமும் உங்கள் குடும்பத்தை பாதிக்கும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று வருடத்திற்கு ஒரு முறையாவது உங்கள் சகோதரி, அவரது கணவர் என்று குடும்பத்தோடு வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுங்கள். அவர்களுக்கு புத்தாடை வாங்கி கொடுங்கள்.

இதில் அவர்களது மனம் மகிழ்ச்சி அடையும். இதன் மூலமாக உங்களது குடும்பமும் சந்தோஷங்களோடும், செழிப்போடும் இருக்கும். இதே குடும்பத்தில் சகோதரிகள் இல்லை, சகோதரர்கள் தான் என்றால், நீங்கள் இணைந்து உங்களது பெற்றோரை மகிழ்ச்சிகரமாக வைத்திருங்கள். அவர்களுக்கு தேவையானதை செய்யுங்கள். பெற்றோர் இல்லை என்றால், அவர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கடனை சகோதரர்கள் இணைந்து செய்வது நன்மை அளிக்கும். அதே போல் மாதம் ஒருமுறை உங்களின் நலன் காக்கும் குலதெய்வ வழிபாடு செய்வது உங்கள் குலத்தை செல்வ செழிப்போடும், மகிழ்ச்சி நிறைந்தும் வைக்க உதவும்.